தயவுசெய்து ரஜினியை முதல்வர் ஆக்கிடுங்கள்! இல்லாட்டி அவர் பிரதமர் ஆயிடுவார்: திருமாவளவன்

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2017 (05:30 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனேகமாக ஜூலை மாதம் கட்சியை ஆரம்பித்துவிடுவார் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.




 




இந்த நிலையில் ரஜினியை அரசியலுக்கு வர விடக்கூடாது என்று ஒருசிலர் முயற்சித்து வரும் நிலையில் பெரும்பாலான அரசியல்வாதிகள் அவர் அரசியலுக்கு வருவதை ஆதரித்து வருகின்றனர்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் திருமாவளவன் கூறியதாவது:

தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும் என்பதெல்லாம் இனி எடுபடாது. மொழி சார்ந்த கொள்கைகள் மட்டுமே சரிவராது.

ரஜினிகாந்த் தமிழரல்லாதவர், மராட்டியர், கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதை விட ஒரு மனிதர் ஆளவேண்டும்.

ரஜினிகாந்தை தமிழக முதல்வராக்க தடை செய்தோமானால் அவர் இந்த நாட்டின் பிரதமராகி விடுவார். ஒரு மாநிலத்தை ஆள தடை செய்தால் அவரை இந்தியாவை ஆள வைத்து விடுவார்கள்

இவ்வாறு தொல் திருமாவளவன் கூறினார்.
அடுத்த கட்டுரையில்