ஜப்பான் இளசுகளிடம் டிரெண்ட் ஆகும் நிப்பிள் கவர்!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2017 (02:08 IST)
பொதுவாக நீண்ட தூரம் ஓடும் ரன்னர்கள் நிப்பிள் கவர் என்ற முலைக்காம்பு பாதுகாப்பு கவரை பயன்படுத்துவதுண்டு. நீண்ட தூரம் ஓடும்போது நிப்பிளில் ஏற்படும் வலியை தடுக்கவே இந்த ஏற்பாடு



 


ஆனால் தற்போது ஜப்பானில் இள வயது பெண்கள் அனைவருமே நிப்பிள் கவர் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். டைட்டான மேலாடை அணியும்போது நிப்பிள் ஆடையை மீறி தெரிவதாகவும் இதனை தவிர்ப்பதற்காகவே நிப்பிள் கவர் அணிவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 50000 நிப்பிள் கவர்கள் விற்பனை ஆகியுள்ளதாம்

இந்த நிலையில் பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் தற்போது நிப்பிள் கவர் தற்போது மார்க்கெட்டில் கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்த நிப்பிள் கவர் கலாச்சாரம் ஜப்பானில் மட்டுமின்றி மெல்ல மெல்ல கிழக்காசியா முழுவதும் பரவி வருவதால் வருங்காலத்தில் இதுவொரு நல்ல பிசினஸ் என்று இப்போதே இதில் கால்பதிக்க பல தொழிலதிபர்கள் முயற்சித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்