”நான் ரஜினி படங்களை விரும்பி பார்ப்பேன்”..ராஜேந்திர பாலாஜி

Arun Prasath
வியாழன், 14 நவம்பர் 2019 (12:47 IST)
ரஜினியை எப்போதும் விமர்சித்து வருவதாக கேள்வி எழுந்த நிலையில் ”நான் ரஜினி படங்களை எப்போதும் விரும்பி பார்ப்பேன்” என ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் தான் அரசியல் கட்சி தொடங்குவதாக எப்போது அறிவித்தாரோ அப்போதிலிருந்தே தமிழகத்தில் வெற்றிடம் நிலவி வருகிறது என தனது பேட்டிகளில் கூறிவருகிறார். ரஜினியின் இந்த கருத்தை அதிமுகவினரும் திமுகவினரும் விமர்சித்து வருகிறார்.

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ரஜினி என்ன தலைவரா? என நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து விமர்சித்து பேசினார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் உருவ சிலை அச்சடிக்க பரிசீலனை செய்து வருவதாக கூறினார்.

அதை தொடர்ந்து ரஜினி, கமல் அரசியல் நுழைவு குறித்தான விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பியபோது, ”ரஜினிக்கும் கமலுக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல, ரஜினி திரைப்படங்களை நான் எப்போதும் விரும்பி பார்ப்பேன்” என கூறியுள்ளார்.

முன்னதாக முதல்வர் எடப்பாடி கமலுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும் என காட்டமாக விமர்சித்த நிலையில் தற்போது ராஜேந்திர பாலாஜி ரஜினிக்கும் கமலுக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்