தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (07:15 IST)
தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
 தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதை அடுத்து இன்னும் சில நாட்களுக்கு மாநிலம் முழுவதும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் மிதமான மழை முதல் லேசான மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை
ஆகிய 23 மாவட்டங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதியிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்