சென்னையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஆரிப் ரஹ்மான் தன் காரை விற்ற பணத்தில் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதித்த குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு புத்தாடைகள் வழங்கியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஆரிப் ரஹ்மான். இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவர், தனக்குச் சொந்தமான காரை விற்று ஹெச்.ஐ.வி தொற்றால் பாதித்த குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் என 350 பேருக்கு தீபாவளிக்கான புதிய ஆடைகள் வழங்கியுள்ளார்.