கனமழை எதிரொலி: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Prasanth Karthick
திங்கள், 14 அக்டோபர் 2024 (13:42 IST)

நாளை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

நாளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஏற்கனவே மழை வெளுத்து வாங்கி வருகிறது.

 

இந்நிலையில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு சென்னை மற்றும் அருகே உள்ள மாவட்டங்களில் கனமழை மற்றும் அதீத கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன.
 

ALSO READ: கனமழை எச்சரிக்கை ஆய்வுக்கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுறுத்தல்கள்..!
 

தற்போது கனமழை எச்சரிக்கையின் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மழைப்பொழிவை பொறுத்து மேலும் சில மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்