குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் மற்றும் காயமடைந்தார்கள் என்ற விவரங்களை இராணுவமே தெரிவிக்கும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார்
இன்று காலை 11 40 மணிக்கு குன்னூரில் இருந்து கிளம்பிய ஹெலிகாப்டர் ஒன்று தரை இறங்குவதற்கு 5 நிமிடத்துக்கு முன்னர் திடீரென மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது
இந்த ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்ததாகவும் மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் ராணுவம் சார்ந்த விவகாரம் என்பதால் விபத்து குறித்த விவரங்களை இராணுவம்தான் அதிகாரபூர்வமாக தெரிவிக்கும் என மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்