மோசமான வானிலையை சமாளிக்ககூடிய இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி?

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (15:36 IST)
உலகின் மிக உயர்ந்த தொழில்நுட்ப வசதிகளை கொண்ட Mi-17 V5 விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

 
கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சென்ற போது காட்டேரி மலைப்பாதை பகுதியில் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 14 பேர் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர். பயணித்த 11 பேர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்னும் 3 பேரை மீட்க வேண்டியுள்ளது. 7 பேர் மரணித்துள்ளனர்.  
 
இன்று காலை 11.47 மணிக்கு சூலூரில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் விபத்து குன்னூர் காட்டேரி பகுதியில் மதியம் 12.20 மணிக்கு நடந்ததாகவும், இதன் பின்னர் சுமார் ஒன்றரை மணி நேரம் ஹெலிகாப்டர் எரிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இறங்க வேண்டிய இடமான வெலிங்டனில் இருந்து 10 கிமி முன்னால் விபத்து ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் தரையிறங்க 5 நிமிடங்கள் மட்டுமே இருந்துள்ளது. 
இந்நிலையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. Mi-17 V5 ரஷ்யாவின் கசன் நிறுவனத்தின் தயாரிப்பாகும். ராணுவ போக்குவரத்துக்கு பயன்படக்கூடிய இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் பயணிக்க முடியும். உலகின் மிக உயர்ந்த தொழில்நுட்ப வசதிகளை கொண்டது இது. அதுவும் குறிப்பாக மோசமான வானிலையையும் சமாளித்து பறக்கக்கூடிய திறன் வாய்ந்தது. 
 
இதனிடையே மேக மூட்டம் அதிகமாக இருந்ததால் விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம் தரப்பிலிருந்து விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்