புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது கோபத்தைப் பதிவு செய்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிக்கு அருகே உள்ள ஏம்பல் எனும் கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஜெயபிரபா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘செதஞ்சஅந்தபச்சப்புள்ளஒடம்பபாத்தாலேபதறுதே. பெத்தவங்கஎப்புடிதுடிச்சிருப்பாங்க? எப்புடிடாஇப்படிலாம்பண்ணுறீங்க! உலகம்அழியப்போகல, அழிச்சுக்கிட்டுஇருக்கோம். நாடும்நாட்டுமக்களும்நாசமாபோகட்டும்அப்புடின்னுசும்மாசொல்லிட்டுப்போகல. ரொம்பகஷ்டமாஇருக்குயா" எனத் தெரிவித்துள்ளார்.