சிறுமிக்கு என்ன நேர்ந்தது, யார் இப்படி செய்தது என போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக 3 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்து வரும் போலீஸார் விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள் என நம்பப்படுகிறது.
மீண்டும் ஒரு சிறுமி! அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் ரத்தக்காயங்களுடன் குளம் ஒன்றில் கிடந்தது என்பது அதிரச் செய்கிறது. பெண்கள்- குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது. இத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.