எம்.ஜி.ஆர் பாட்டை போட்டு எண்ட்ரி கொடுக்கும் எச்.ராஜா! – ட்ரெண்டாகும் வீடியோ!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (13:39 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் காரைக்குடியில் போட்டியிடும் எச்.ராஜா, எம்ஜிஆர் பாடலை வைத்து தனக்கான விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக சார்பில் காரைக்குடி தொகுதியில் எச்.ராஜா போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் தொடர்ந்து பல கட்சியினர் எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தி கொள்வது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒருபுறம் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட கட்சி அதிமுக என்ற நிலையில், மறுபுறம் கமல்ஹாசன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் எம்.ஜி.ஆரை ரெபரன்ஸாக வைத்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வரிசையில் எச்.ராஜாவும் இணைந்துள்ளார். காரைக்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எச்.ராஜா ஒரு விளம்பர வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் எம்.ஜி.ஆரின் கடவுள் என்னும் முதலாளி பாட்டு இடம்பெற எச்.ராஜா விவசாயம் செய்வது, கால்நடைகளுக்கு தீவனம் வைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்