சர்க்கரை, அப்பளம், சாக்லேட் பொருட்களின் ஜி.எஸ்.டி வரி உயருகிறதா?

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (10:36 IST)
சர்க்கரை, அப்பளம், சாக்லேட் உள்ளிட்ட பொருட்களின் ஜிஎஸ்டி வரியை உயர்த்தப்பட வாய்ப்புக்காக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், கேஸ் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் தற்போது சர்க்கரை அப்பளம் சாக்லெட் உள்ளிட்ட 143 பொருட்களின் ஜிஎஸ்டி வரியை 26 வீதமாக உயர்த்தலாம் என மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது
 
 மேற்கண்ட பொருட்களுக்கு தற்போது 18 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி வரி இருந்து வரும் நிலையில் 10 சதவீதம் உயர்த்த மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டு வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மேற்கண்ட பொருட்கள் உள்பட 143  பொருள்களின் ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாவார்கள் என்பது குறிப்பிடதக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்