முக்கிய தேர்வுகளை ஒத்திவைத்தது ஆசிரியர் தேர்வு ஆணையம்: அதிரடி அறிவிப்பு..!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (13:22 IST)
பட்டதாரி ஆசிரியர்/ வட்டார வளமைய ஆசிரியர் தேர்வு மழை பாதிப்புகள் காரணமாக ஒத்திவைத்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
 
 ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிக்கையின்படி ஜனவரி 7ஆம் தேதி நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்/  வட்டார வளமைய ஆசிரியர் தேர்வானது மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேற்கண்ட தேர்வானது வருகின்ற பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி அன்று நடைபெறும் என்று விண்ணப்பதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 7ஆம் தேதி அன்று நடைபெற இருந்த மேற்கண்ட தேர்வுக்கான நுழைவு சீட்டினை பிப்ரவரி 4ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கும் தேர்வுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என விண்ணப்பதாரர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்