டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு எப்போது? புதிய தகவல்..!

புதன், 20 டிசம்பர் 2023 (16:03 IST)
2024ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு திட்ட அட்டவணை  டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் காலதாமதம் வருவதை அடுத்து  தேர்வு திட்ட அட்டவணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் இது குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

டிஎன்பிஎஸ்சி 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு திட்ட அட்டவணை டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் சென்னையில் ஏற்பட்ட புயல் மழை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் மழை காரணமாக டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக வேண்டிய அட்டவணை இதுவரை வெளியாகவில்லை.  

இதனால் எப்போது 2024 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு திட்ட அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி சற்றுமுன் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு திட்ட அட்டவணை வெளியாகும் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்