மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு எப்போது? அன்பில் மகேஷ்

புதன், 27 டிசம்பர் 2023 (11:06 IST)
வெள்ளம் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது ஜனவரி மாதம் இந்த தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  

தென் மாவட்டங்களில் கனமழையால் பள்ளிகள் மூடப்பட்டதால் ஒரு சில பாடங்களுக்கு அரையாண்டு தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும் ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் போது அந்த தேர்வுகளை நடத்தப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.

 மேலும் ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு ஒத்திவைப்பது குறித்து முதலமைச்சர் இடம் ஆலோசனை கேட்கப்படும் என்றும்  இந்த தேர்வை கணினி வழியில் ஏன் நடத்த முடியவில்லை என்று ஆசிரியர் பணியாளர் தேர்வாணைய தலைவரிடம் விளக்கம் கேட்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்