ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய பதவி - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Webdunia
சனி, 18 நவம்பர் 2023 (13:23 IST)
ஆளுனர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய பதவி என்றாலும், இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களை  கவர்னர் நிறுத்தி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில்  10 மசோதாக்களை திடீரென கவர்னர் ரவி திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இன்று காலை சிறப்பு சட்டமன்றம் கூடி, கவர்னர் திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

‘’இந்தியா இதுவரை கண்டிராத முன்னோடி திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். ஆளுனர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய பதவி என்றாலும், இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்..

ஆளுனர் ரவி, தமிழ் நாட்டு மக்களையும், சட்டமன்றத்தையும் அவமதிக்கிறார். பல்கலை, துணைவேந்தர் தேர்வு செய்வதில் ஆளுனர் – முதல்வர் இடையே சுமூக முடிவுகள் முன்பு எடுக்கப்பட்டன. ஆனால், தற்போது, சிண்டிகேட், செனட் தேர்வு செய்தவர்களையும் ஆளுனர்  நிராகரிக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்