கீற்று மறைப்புக்குள் நுழைந்து இளம்பெண் குளிப்பதை பார்த்த ஆளுநர்: பொதுமக்கள் சுற்றிவளைப்பு!

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2017 (16:25 IST)
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்றார். அவர் அங்கு கீற்று மறைப்புக்குள் குளித்துக்கொண்டு இருந்த இளம்பெண்ணை நேரில் பார்த்ததாக புகார் எழுந்துள்ளது.
 
தமிழக ஆளுநராக பதவியேற்றுக்கொண்ட பன்வாரிலால் புரோஹித், சமீபத்தில் கோவையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல சர்ச்சைகள் எழுந்தது. அதனையடுத்து ஆளுநர் கடலூரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. அதன் படி அவர் இன்று கடலூரில் ஆய்வு மேற்கொண்டார். அவருக்கு திமுகவினர் கருப்புக்கொடி காட்டினர்.
 
இதனால் ஆளுநரின் ஆய்வுப்பயண திட்டம் மாறிப்போனது. அவர் கடலூரில் வண்டிப்பாளையம், அம்பேத்கர் நகர் முதலான பகுதிகளில் ஆய்வு செய்தார். அம்பேத்கர் நகர் தெருக்களில் ஆளுநர் செல்லும்போது வீட்டு வாசல்களில் உள்ள கீற்று மறைப்புக்குள் இருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு தூய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு மேற்கொண்டார்.
 
கீற்று மறைப்புகள் அவர்களது குளியலறை என தெரியாமல் அங்கு நுழைந்த ஆளுநரை பார்த்து அங்கு குளித்துக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் பதறிப்போனார். இதனையடுத்து ஆளுநரும் அதிகாரிகளும் அங்கிருந்து நகர்ந்தனர். ஆனால் பெண்கள் சத்தம் போட பொதுமக்கள் ஆளுநரை சூழ்ந்து கொண்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்