திடீர் மாரடைப்பால் உயிரிழந்த மருத்துவர்; பதற வைக்கும் வீடியோ காட்சி

வெள்ளி, 15 டிசம்பர் 2017 (15:14 IST)
சேலம் வினாயகா மிஷனில் பணிபுரிந்து வந்த மருத்துவர், பணியில் இருந்த போதே ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை பதர வைத்துள்ளது.
வயது வித்தியாசம் பார்க்காமலும் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் வந்து உயிரைப் பறிக்கக் கூடிய ஒரு கொடிய நோய் மாரடைப்பு. மாரடைப்பு பணக்காரன், ஏழை, சிறியவர், பெரியவர், படித்தவர், படிக்காதவர் என பாகுபாடில்லாமல் யாரை வேண்டுமானாலும் இந்நோய் தாக்கும். அப்படி மாரடைப்புக்கு பலியானவர் தான் சுனிதா என்ற மருத்துவர்.சேலம் வினாயகா மிஷனில் பணிபுரிந்து வந்த மருத்துவர் சுனிதா. பணியில் இருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுக் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். மாரடைப்பால் உயிரிழந்த வீடியோ காட்சி பார்ப்பவர் மனதை பதற வைக்கும் வகையில் உள்ளது.
 
இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் 50 சதவீதம் இதய சம்பத்தப்பட்ட நோயால் தான் வருகிறது என உலக சுகாதார மையம்(WORLD HEALTH ORGANISATION) தெரிவித்துள்ளது.சமீபத்தில், எய்ம்ஸ் மருத்துவர் சந்தீப் மிஸ்ரா வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் 33 நொடிக்கு ஒருவர் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். ஒவ்வொரு வருடத்திற்கு 20 லட்சம் பேர் மாரடைப்பால் மரணமடைகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்