இதன்படி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேற்று ஆறுமுகசாமி கமிஷனில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர், தீபக்கிடம் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் இன்று தீபாவின் கணவர் மாதவன் விசாரணைக்கு ஆஜரானார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலா, நடராஜன், திவாகரன், டிடிவி தினகரன், ராஜம்மாள், பூங்குன்றன் உள்ளிட்டடோரிடம் உண்மை கண்டறியும் கருவி மூலம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் மேலும் மனு ஒன்றை விசாரணை கமிஷனிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.