பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் பறிபோனது.! முதல்வர் ஸ்டாலின் காட்டம்..!

Senthil Velan
வெள்ளி, 3 மே 2024 (16:53 IST)
பாஜக ஆட்சியில் இந்தியாவின் பத்திரிகை சுதந்திரம் பறிபோனது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
 
ஆண்டுதோறும் மே மாதம் 3ஆம் தேதியன்று உலகப் பத்திரிகை சுதந்திர நாள் கொண்டாடப்படுகிறது, பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், உலகப் பத்திரிகை சுதந்திர நாளான இன்று கடுமையான யதார்த்தத்தை எதிர்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார். பாஜக ஆட்சியில், இந்தியாவின் பத்திரிகை சுதந்திரம் பறிபோனது என்று முதல்வரை விமர்சித்துள்ளார்.
 
கௌரி லங்கேஷ், கல்புர்கி போன்ற பத்திரிக்கையாளர்களின் கொலைகள், சித்திக் கப்பன், ராணா அய்யூப் போன்ற பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து மிரட்டுவதுடன், அதிகாரத்திற்கு எதிராக உண்மையை பேசத் துணிந்த பலரையும் பாஜக ஆட்சியில் தொடர்ந்து மிரட்டியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ALSO READ: 2 மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுங்கள்.! முதல்வருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை..!!
 
ஜனநாயகத்தில் பத்திரிகைகளின் பங்கை நாம் கொண்டாடும் போது, ​​சுதந்திரமான பேச்சுரிமையின் மதிப்புகளை நிலைநிறுத்துவதற்கும், பத்திரிகையாளர்கள் அச்சமின்றி அல்லது அடக்குமுறை தணிக்கையின்றி பணியாற்றுவதை உறுதிசெய்வதற்கும் நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்