நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..!

Siva

புதன், 23 ஜூலை 2025 (12:37 IST)
தனது அலுவலக வாகனம் பறிக்கப்பட்டதால், மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் நடைபயணமாகவே அலுவலகம் சென்று ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 
டிஎஸ்பி சுந்தரேசன் கடந்த சில நாட்களாக ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். "லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணிபுரிவதால் எனக்கு தண்டனை தருகிறார்கள். எனது அலுவலக வாகனத்தை எடுத்துக் கொண்டு மனரீதியாக சித்திரவதை செய்கிறார்கள்" என்று அவர் சமீபத்தில் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்திருந்தார். இந்தப் பேட்டி வெளியானதை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட்  சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
 
இந்த சூழலில்தான், தற்போது டிஎஸ்பி சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது உடல்நிலை குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.  
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்