குழந்தையை மாட்டின் மடியில் பால் குடிக்க வைத்த பெற்றோர்.. நெட்டிசன்கள் விளாசல்..!

Mahendran

புதன், 23 ஜூலை 2025 (12:57 IST)
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால், ஒரு பச்சிளம் குழந்தையை நேரடியாக மாட்டின் மடியில் பால் குடிக்க வைத்த பெற்றோரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த வீடியோவில், ஒரு வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை மாட்டின் மடியில் வாய் வைத்து பால் குடிக்க, அதை ஒரு பெற்றோர் வேடிக்கையாக வீடியோ எடுத்து ஆன்லைனிலும் வெளியிட்டுள்ளனர்.
 
இந்த காட்சியை பார்த்த பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குழந்தைகளுக்குப் பச்சைப் பால் பாதுகாப்பானது அல்ல" என்றும், "தாய்ப்பால் தவிர வேறு எதுவுமே நேரடியாக கொடுக்கக் கூடாது" என்றும் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
 
"விலங்குகளிடமிருந்து நேரடியாக பாலூட்டுவது சுகாதாரமற்றது என்றும், மருத்துவ ரீதியாக பொருத்தமற்றது" என்றும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பச்சை பாலில் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும் என்றும், பாலை கொதிக்க வைத்து கொடுப்பதன் மூலமே அந்த பாக்டீரியாக்களை அகற்ற முடியும் என்றும் மருத்துவ நிபுணர்கள் இந்த வீடியோவுக்குக் கீழ் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். 
 
இந்த சம்பவம், குழந்தையின் ஆரோக்கியம் குறித்த தீவிர கவலைகளை எழுப்பியுள்ளது.
 

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்