வழிப்பறி கொள்ளை செய்த 4 இளைஞர்கள் கைது.. கைதான சில நிமிடங்களில் தடுக்கி விழுந்து எலும்பு முறிவு..!

Siva
திங்கள், 11 மார்ச் 2024 (14:58 IST)
ஸ்ரீபெரும்புதூர் அருகே வழிப்பறி கொள்ளை செய்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கைதான சில நிமிடங்களில் அவர்கள் தப்பிக்க முயன்றதாகவும் அப்போது தவறி விழுந்ததில் கை எலும்பு முறிந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் என்ற பகுதியில் அடிக்கடி இரவு நேரத்தில் செல்போன் பணம் தங்க சங்கிலி போன்றவைகளை மர்ம நபர்கள் வழிப்பறி செய்வதாக காவல் நிலையத்திற்கு புகார் வந்தது

இதையடுத்து காவல்துறையினர் இரவில் தீவிர சோதனை செய்தபோது இரண்டு பைக்குகளில் நான்கு இளைஞர்கள் சந்தேகத்துக்குரிய வகையில் வந்ததை அடுத்து அவர்களை கைது செய்தனர்

இந்த நிலையில் நால்வரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்ற போது தப்பிக்க முயன்றதாகவும்அப்போது நால்வரும் தடுக்கி கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதைஅடுத்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு கையில் கட்டு போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்