மோடியா? தீதியா.. பிரச்சாரத்தை தொடங்கினார் மம்தா பானர்ஜி..!

Siva
திங்கள், 11 மார்ச் 2024 (14:51 IST)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மோடியா? லேடியா? என தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மோடியா தீதியா என தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மேற்குவங்கத்திற்கு எதிரான சக்திகளை இந்த மண்ணில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள் என்றும் இந்த மக்களின் முடிவை இனி மாற்ற முடியாது என்றும் மம்தா பானர்ஜி  தனது பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார் 
 
மேற்குவங்க மக்களின் அடிப்படை தேவைகளான உணவு உடை இருப்பிடம் ஆகியவற்றை பாஜக பறித்துக் கொண்டது என்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வ்அங்கத்து மக்களின் குரங்கலை குரலை அடக்க நினைக்கிறது என்றும் இந்த மண்ணில் இருந்து அவர்கள் விரட்டி அடிக்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி  பேசி உள்ளார் 
 
மேற்குவங்கத்தில் மோடியா? தீதியா? என மம்தா பானர்ஜி  பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்