கடந்தாண்டு, அக்டோபர் மாதம் 29ஆம் தேதி சிறை காவலர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, கோவை மத்திய சிறையில் இருந்து விஜயரத்தினம் தப்பி உள்ளார். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் கூடலூர் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு காவல்துறையினர் மூன்று மாதமாக குற்றவாளியை தேடி வந்தனர்.
விஜயரத்தினத்தை பிடிக்க போலீசார் பின் தொடர்ந்து சென்ற போது, அங்குள்ள ஆற்றை கடக்க முயன்ற விஜயரத்தினம், அங்கிருந்த பாறையில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவரது இடது காலில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வலி தாங்க முடியாமல் கதறி துடித்த விஜய் ரத்தினத்தை போலீசார் மடக்கி பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும், படுகாயம் அடைந்த காவலர் முத்து முருகனையும் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகு கோவை மத்திய சிறையில் விஜயரத்தினம் அடைக்கப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.