தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு கட்டணம் எவ்வளவு?

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (10:52 IST)
மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கி உள்ள நிலையில் கல்வி கட்டணம் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு நேற்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக்கல்வி இயக்கம் அறிவித்தது. அதன்படி www.tnhealth.tn.gov.in என்ற இணையத்தளத்தில் நேற்று காலை 10 மணி முதல் ஜனவரி 7 ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக்கல்வி இயக்கம் தெரிவித்தது.
 
இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கி உள்ள நிலையில், கல்வி கட்டணம் எவ்வளவு என்பது குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விவரம் பின்வருமாறு... 
 
அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களில் சேர ஒரு ஆண்டுக்கு கல்வி கட்டணம் ரூ.13,610, பிடிஎஸ் இடங்களில் சேர ஆண்டுக்கு ரூ.11,610 . 
 
கே கே நகரில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவ கல்லூரிக்கு மட்டும் கல்வி கட்டணம் ரூ.1 லட்சம் ஆகும்.
 
சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்களுக்கு கல்வி கட்டணம் ரூ.3.85 - ரூ. 4 லட்சம் வரை, பிடிஎஸ் இடங்களுக்கு ரூ.2.50 லட்சம். 
 
கலந்தாய்வில் கலந்து கொண்டு விருப்பமான இடங்களை தேர்வு செய்து குறிப்பிட்ட காலத்திற்குள் சேரவில்லை என்றால் அபராத கட்டணம் செலுத்த வேண்டும். 
 
மருத்துவ படிப்பில் சேர்ந்து இடையில் நின்றால், இடை நின்ற கட்டணமாக ரூ.1 லட்சம் - ரூ. 10 லட்சம் வரை கட்ட வேண்டும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்