உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; ஆனால் மழை இல்லை! – வானிலை ஆய்வு மையம்!

திங்கள், 20 டிசம்பர் 2021 (08:20 IST)
வங்க கடலில் தாமதமாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவான நிலையில் மழை வாய்ப்பு குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மாதம் முதலாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வந்தது, வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் மழை பொழிவு அதிகரித்தது. என்றாலும் அவை எதுவும் புயலாக வலுப்பெறவில்லை.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக உருவாகும் என கணிக்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் தற்போது உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் ம்ழை பொழிவுக்கு வாய்ப்பு இல்லை என்றும், டிசம்பர் 23 வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்