சாட்டை துரைமுருகன் கைது!

ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (22:25 IST)
ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில்  பெண் ஊழியர்கள் 8 பேர்  இறந்ததாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியதாக சாட்ட துரைமுருகன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

காஞ்சிபுரம் மாவட்டம் அருகே ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரியும்2 பணியாளர்கள்  தரமற்ற உணவை சாப்பிட்டு இறந்ததாகக் கூறி சக  பெண் தொழிலாளர்கள் 10 மணி நேரத்திற்கும் மேலாக நேற்று சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தரமற்ற உணவை சாப்பிட்டு இறந்ததாகக் கூறப்பட 2  பெண் ஊழியர்கள் தாங்கள் நலமுடன் இருப்பதாக வீடியோ கால் மூலமா விளக்கம் அளித்தனர்.

இதையடுத்து, அமைச்சர் கணேசன் பெண் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, 16 மணி நேரமாக நடந்த போராட்ட முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், ஃபாகஸ்கான் நிறுவன தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவுப் பொருட்களை தயாரித்துக் கொடுத்த சக்தி கிச்சன் கேட்டரிங் நிறுவனத்தைச் சேர்ந்த பிபின்(34) மற்றும் கவியரசன் (32) ஆகிய  2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அந்நிறுவனத்தின் உயரதிகாரிகளையும் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது, ஃபாக்ஸ்கான் விடுதியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட பெண் ஊழியர்கள் 200 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

அப்போது, சிகிச்சை பெற்று வந்த 8 பெண்கள் காணாமல் போனதாகவும்ம் வர்கள் கெட்டுப் போன உணவைச் சாப்பிட்டு இறந்து போனதாகவும் பொய்யான தகவல் பரப்பிய சேலம் வளர்மதி கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது சாட்ட துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்