யூட்யூப் பார்த்து பிரசவ முயற்சி; குழந்தை உயிரிழந்த சோகம்! – ராணிப்பேட்டையில் அதிர்ச்சி!

திங்கள், 20 டிசம்பர் 2021 (10:24 IST)
ராணிபேட்டையில் யூட்யூபை பார்த்து தானாக பிரசவம் பார்க்க முயன்றதால் குழந்தை உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக பலர் பல்வேறு செயல்களுக்கும் யூட்யூபை பார்த்து செய்வது என்பது பழக்கமாகி வருகிறது. பலர் உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு கூட மருத்துவரை அணுகாமல் யூட்யூப் பார்த்து தானாக சிகிச்சை எடுத்துக் கொள்ள முயல்வது ஆபத்தானதாக மாறி வருகிறது.

ராணிப்பேட்டை அருகே உள்ள நெடும்புலி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவருக்கு சமீபத்தில் திருமணமான நிலையில் மனைவி கர்ப்பமாக இருந்துள்ளார். பிரசவம் நெருங்கிய நிலையில் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே வைத்து யூட்யூப் மூலமாக பிரசவம் பார்க்க முயன்றுள்ளார். இதில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோகநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்