முக ஸ்டாலினை ஏன் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கூடாது? பரூக் அப்துல்லா

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (19:52 IST)
முக ஸ்டாலினை ஏன் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கூடாது என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா அவர்கள் பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்தநாள் விழா இன்று சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உத்தர பிரதேச மாநிலம் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்
 
இந்த நிகழ்ச்சிகள் பேசிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா,  தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினை ஏன் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கூடாது என்று கேள்வி எழுப்பினார். ஏன் அவரால் பிரதமராக முடியாதா? அவர் பிரதமர் ஆனால் என்ன தவறு என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 
 
நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெறும்போது இந்த தேசத்தை வழிநடத்தி ஒன்றிணைக்க சிறந்த மனிதர் யார் என்பதை அப்போது முடிவு செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். ஒட்டுமொத்த இந்தியாவுக்கு சேவை செய்வதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நீண்ட காலமாக வாழ்வார் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்