சமூக வலைதளங்களில் ஒன்றாக டுவிட்டர், இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் முடங்கியுள்ளதால் பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் உள்ள முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்று டுவிட்டர். கடந்தாண்டு அக்டோபம் மாதம் இந்த நிறுவனத்தை பல கோடிகள் கொடுத்து டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க் வாங்கினார்.
உலகில் உள்ள முன்னணி தொழிலதிபர்கள், தேச அதிபர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா , விளையாட்டு நட்சத்திரங்கள், பொதுமக்கள் என அனைவரும் இதில், கணக்குகள் வைத்துள்ளனர்.
கடந்தாண்டு வரை 7,500 ஊழியர்கள் பணியாற்றிய நிலையில், இந்த நிறுவனத்தில் தற்போது 1800 மட்டுமே பணியாற்றி வரும் நிலையில், இன்று டுவிட்டர் சேவை பல நாடுகளில் முடங்கியுள்ளது.
இதனால், வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.