தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில் இன்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் அமைச்சர் உதயநிதி சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளன. அமைச்சரான பின் முதல் முறையாக டெல்லி சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியதாகவும் இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய கோரிக்கைகளையும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டில் நடத்துவது குறித்த கோரிக்கைகளையும் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளன.