செந்தில்பாலாஜி நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தார்: நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்..!

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (17:34 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தார் என்றும் இன்று திடீரென அவர் தனக்கு உடல் நல குறைவு என்று கூறி வருகிறார் என்றும் எனவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது என்றும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம் செய்து வருகிறது. 
 
மேலும் செந்தில் பாலாஜிக்கு ரிமாண்ட் உத்தரவு சரியானது என்றும் இடைக்கால ஜாமின் வழங்கவும் சட்டத்தில் இடை இடமில்லை என்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் வாதம் செய்து வருகின்றனர். 
 
மேலும் செந்தில் பாலாஜிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டால் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை நாங்களே வழங்குவோம் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ குழுவை நீதிமன்றமே நியமிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை வாதம் செய்தது. 
 
இந்த வாதத்திற்கு பிறகு செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை சென்னை முதன்மை நீதிமன்றம் ஒத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்