செந்தில் பாலாஜிக்கு வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல்: நீதிமன்றம் உத்தரவு..!

புதன், 14 ஜூன் 2023 (16:15 IST)
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியான நிலையில்  அவரை தற்போது ஜூன் 28ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி திமுக தரப்பும் செந்தில் பாலாஜியை ரிமாண்ட் செய்ய உத்தரவிட வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பும் வாதம் செய்தனர்.
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்