கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம்.. மேலும் 7 பேர் கைது.. இன்னும் கைது இருக்கும் என தகவல்..!

Siva

செவ்வாய், 25 ஜூன் 2024 (07:13 IST)
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் தினமும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தற்போது மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பென்சிலால், சடையன், ரவி, செந்தில், ஏழுமலை, கௌதம், சிவக்குமார் ஆகிய 7 நபர்கள் கைது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்ட 7 பேரும் மெத்தனாலை பெரிய நிறுவனங்களிடம் இருந்து வாங்கி தனி நபர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட 7 பேரையும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் அடைத்தனர்
 
விஷ சாராய வழக்கில் ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று சென்னை மாதவரத்தைச் சேர்ந்த பிரபல கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்