செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டிற்கு சீல்.. வருமான வரித்துறையின் ஆட்டம் ஆரம்பம்..!

புதன், 14 ஜூன் 2023 (16:25 IST)
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு அவரை 28ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவரது உதவியாளர் வீட்டுக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை அபிராமிபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் உதவியாளர் கோகுல்ராஜ் என்பவரின் இரண்டு வீடுகளுக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோகுல்ராஜ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால் அவரது வீட்டிற்கு சீல் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
 அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை செய்து பல ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படும் நிலையில் தற்போது அவருடைய உதவியாளரின் வீட்டிற்கும் சீல் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்