ஓபிஎஸ் அண்ணே.. நீங்க இப்போ ஒருங்கிணைப்பாளர் இல்ல! – எடப்பாடியார் வைத்த செக்!

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (15:32 IST)
ஓ.பன்னீர்செல்வம் இனி ஒருங்கிணைப்பாளர் இல்லை என அவருக்கே எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. சில நாட்கள் முன்னதாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்த பேச்சால் பரபரப்பு எழுந்த நிலையில் எந்த வித தீர்மானமும் நிறைவேறாமல் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது.

இந்நிலையில் ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டத்தை நடத்த எடப்பாடியார் அணி திட்டமிட்டு வரும் நிலையில் தனது அனுமதி பெறாமல் கூட்டத்தை நடத்த இயலாது என ஓபிஎஸ் கடிதம் வெளியிட்டார்.

தற்போது இதற்கு பதில் கடிதம் எழுதியுள்ள எடப்பாடி பழனிசாமி “அன்புள்ள அண்ணன் ஓ.பி.எஸ் அவர்களுக்கு வணக்கம். 29ம் தேதியிட்ட உங்கள் கடிதத்தை ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன். அந்த கடிதம் எனக்கு மகாலிங்கம் வழியாக கிடைத்தது. 23ம் தேதியன்று நடந்த பொதுக்குழுவில் கடந்த 2021 டிசம்பர் 1ம் தேதியில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால் அந்த சட்டங்கல் காலாவதியாகிவிட்டன. அதனால் கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லாது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்