ஓபிஎஸ் பின்னால் இருந்து திமுக செயல்படுகிறது: சிவி சண்முகம்
புதன், 29 ஜூன் 2022 (15:59 IST)
ஓபிஎஸ் பின்னால் திமுக செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றம்சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது என்பதும் ஒற்றை தலைமையை பிடிக்க ஈபிஎஸ் தரப்பினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஓபிஎஸ் மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டி வரும் நிலையில் ஓபிஎஸ் பின்னால் திமுக செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
வரும் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு திட்டப்படி நடைபெறும் என்றும் ஓபிஎஸ் பின்னாலிருந்து திமுக செயல் பட்டாலும் அதை தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது