அமெரிக்காவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஸ்பெயினை சேர்ந்த தொழிலதிபர் குடும்பத்துடன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஒன்று பயணிகளை ஏற்றி சென்றபோது நியூயார்க்கின் ஹட்சன் நதியின் மேலே பறந்தபோது ஆற்றில் விழுந்து பெரும் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த விமானி உள்பட 6 பேரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பலியானவர் பிரபலமான சீமன்ஸ் (Siemens) நிறுவனத்தின் ஸ்பெயின் நாட்டு CEO என்று தெரிய வந்துள்ளது. அவருடன் அவரது மனைவி மெர்ஸ் காம்ப்ருபி மற்றும் 3 குழந்தைகளும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். விடுமுறையை கழிக்க அமெரிக்கா வந்த நிலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.
ஹெலிகாப்டர் பயணித்த போது கடைசி சில நொடிகளில் ஆற்றில் விழுந்து சிதறிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K
The main rotor and tail boom separated mid-air. Rotor blades were fully detached from the fuselage but continued spinning as they fell.#HudsonRiver #HelicopterCrash #Breaking pic.twitter.com/xrMUQ5SMRr
— Turbine Traveller (@Turbinetraveler) April 10, 2025