வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

Siva
வெள்ளி, 17 மே 2024 (14:46 IST)
ஏற்கனவே இணையதளம், செயலிகள் மூலம் மின்கட்டணம் கட்டலாம் என்ற வசதி இருக்கும் நிலையில் தற்போது வாட்ஸ் அப் மூலமாக மின்கட்டணம் கட்டலாம் என மின்சார துறை தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின் கட்டணம் கட்ட வேண்டும் என்றால் மின்சார அலுவலகம் சென்று மணி கணக்கில் வரிசையில் காத்திருந்து கட்ட வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது எல்லாம் டிஜிட்டல் மையமாகிவிட்ட நிலையில் மின்கட்டணத்தை பலர் மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திலும் மின்சார வாரியத்தின் செயலிலும் கட்டி வருகின்றனர் என்பதும் இதனால் வீட்டில் இருந்து கொண்டே மிக எளிதில் மின்கட்டணம் கட்டும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக மின் கட்டத்தை வாட்ஸ் அப் மூலம் கட்டலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோர் வாட்ஸ் அப் செயலி மூலம் யூபிஐ வாயிலாக மின் கட்டணம் செலுத்தலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 
 
தமிழக மின்வாரியத்தின் இந்த அறிவிப்புக்கு பெரும்பாலான மின் நுகர்வோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்