செங்கல்பட்டில் நில அதிர்வு: மக்கள் பீதி!

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2018 (19:41 IST)
சென்னையை அடுத்த செங்கல்பட்டு பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்தை விட்டு அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
 
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள மஹேந்திரா சிட்டி பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வால் அலுவலகங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த மக்கள் வெளியே ஓடி வந்து சாலையில் நின்றனர். 
 
இதனால் சிறிது நேரத்திற்கு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நில அதிர்வுக்கான காரணம் தெரியாத நிலையில் இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்