திமுகவின் நிரந்தர தலைவர் பதவி கருணாநிதிக்கே - கட்டையை போடும் துரை தயாநிதி

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (13:51 IST)
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி வகித்து வந்த தலைவர் பதவி யாருக்கும் அளிக்கக்கூடாது என அழகிரியின் மகன் துரை தயாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

 
கருணாநிதியின் மறைவுக்கு பின் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்படுவார் எனவும்,  விரைவில் கூடவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதற்கிடையில் கட்சியில் தன்னை மீண்டும் சேர்க்காததால் கடும் கோபத்தில் இருக்கும் அழகிரி, செப்டம்பர் 5ம் தேதி தனது ஆதரவாளர்களை திரட்டி கருணாநிதி சமாதி வரை ஒரு பேரணை நடத்த திட்டமிட்டுள்ளார்.
 
இந்நிலையில், அழகிரியின் மகன் துரை தயாநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் “50 ஆண்டுகள் கடந்து ஒரு இயக்கத்தின் தலைவராக ஆளுமை செலுத்தி மறைந்த தலைவர் கலைஞர் அவர்களின் சாதனையை பறைசாற்றிடும் விதமாக அவர் வகித்த தலைவர் பதவியை அவருக்கான  நிரந்தர தலைவர் பதவியாக கவுரவித்து  கொண்டாடுவதே அவருக்கு அளிக்கின்ற சிறந்த மரியாதையாக அமைந்திடும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு திமுக தொண்டர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இவருக்கு எதிரான கருத்துகளை அவர்கள் முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்