பாடகராக அசத்தும் அமைச்சர் ஜெயக்குமார் : வைரல் வீடியோ

புதன், 22 ஆகஸ்ட் 2018 (13:26 IST)
அதிமுக விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பாடகர் அவதாரமெடுத்த வீடீயோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

 
அமைச்சர் ஜெயக்குமார் என்றால் தமிழக அரசு சார்பில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுப்பவர் என்றுதான் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். 
 
டிடிவி தினகரன், ஸ்டாலின், ரஜினி, கமல் என பலருக்கும் எதிராக அவர் பேட்டி கொடுப்பதை தொலைக்காட்சிகளில் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அவருக்குள் ஒரு பாடகர் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
 
அதிமுக விழா ஒன்றில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் எம்.ஜி.ஆர் பாடலை பாடிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ஒரு மேடை மட்டுமில்லை. பல அதிமுக மேடைகளில் ஜெயக்குமார் பாடகர் அவதாரம் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோவைக் காண கீழ்க்கண்ட இணைப்பை க்ளிக் செய்யுங்கள்....

https://www.facebook.com/groups/plspp/permalink/2389449381305461/

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்