கல்வியில் மதத்தை புகுத்துவது தீவிரவாதத்தை விட மோசமானது: விஜயகாந்த்

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (16:36 IST)
கல்வியில் மதத்தை புகுத்துவது தீவிரவாதத்தை விட மோசமானது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். 
 
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இதுகுறித்து கூறியதாவது:
 
கல்விக்கு மதத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் கல்வி கற்கும் இடத்தில் மதத்தை கொண்டுவந்து புகுத்துவது மிகவும் அபாயகரமான விஷயம் என்றும் கூறியுள்ளார் மேலும் கல்வியில் மதத்தை புகுத்துவது தீவிரவாதத்தை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்