டிஜிட்டல் கல்வி, மதிய உணவுக்கு புது மெனு... புதுச்சேரியில் கலக்கும் தமிழிசை!

வியாழன், 10 பிப்ரவரி 2022 (11:25 IST)
பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளை கணிணி மயமாக்கி டிஜிட்டல் முறையில் கல்வி வழங்க புதுச்சேரி ஆளுநர் தமிழிசை முடிவு. 

 
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று வெளியிட்டுள்ள அரசு தரப்பு செய்தி குறிப்பில் மாணவர்களின் கல்வி தரம் குறித்தும், மதிய உணவு குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளை கணிணி மயமாக்கி டிஜிட்டல் முறையில் கற்றுக்கொள்வதற்கு வசதியாக மேம்பாடு செய்வதற்கும், பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளையும் மேம்படுத்தி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டும். 
 
அதோடு பள்ளிகளில் மதிய உணவில் நவ தானியங்களையும், கருப்பட்டி, வேர்க்கடலை, வாழைப்பழம் போன்ற சத்தான உணவுகளை சேர்ப்பதற்கு வேண்டிய முயற்சிகளை செய்து கொடுத்து ஆலோசனையும், அறிவுரையும், வழிகாட்டுதலும் வழங்கினேன் என குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்