பாஜகவில் இளைஞர்கள் சேர வேண்டாம், அது ஒருவழிப்பாதை: டாக்டர் ராமதாஸ்

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (08:13 IST)
பாஜகவில்  இளைஞர்கள் சேர வேண்டாம் என்றும் அது ஒருவழிப்பாதை என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
 
நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர் பாமகவை பொறுத்தவரை பாஜக தான் முதல் எதிரி என்றும் அதில் ஆர்எஸ்எஸ் கொள்கை இருப்பதால் அது ஒருவழிப்பாதை என்றும் அங்கு இளைஞர்கள் சென்றால் திரும்ப மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தற்போது அண்ணாமலையில் செயல்பாடுகள் இளைஞர்களை ஈர்த்து வருவதால் இளைஞர்கள் பாஜகவில் சேருவதை பாமகவின் முக்கிய நிர்வாகிகள் தடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
ஏற்கனவே அண்ணாமலையின் செயல்பாடுகள் திமுக மட்டுமின்றி அதிமுகவையும் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது பாமகவையும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்