மக்களின் நலனுக்காகவும் முடிந்தால் ஏதாவது செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி அறிக்கை

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (18:24 IST)
கடந்த 9 மாதக் காலமாக அலங்கோலமாக  ஆட்சி  நடத்தி வரும் முக ஸ்டாலின் தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க  நாடகம் ஆடுவதை  இயோ நிறுத்திவிட்டு மக்களின் நலனுக்கான எதாவது செய்ய வேண்டுமென  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:  இட ஒதுக்கீடாக இருந்தாலும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடாக இருந்தாலும் எந்த விதத்திலும் சமூக நீதி மீறப்படவில்லை. ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றுவதுபோல்  திரு. ஸ்டாலின் அவர்கள் 37  கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 9 மாத காலமாக அலங்கோல ஆட்சி நடத்தி வரும் @mkstalin தன்னுடைய நிர்வாக தோல்வியை மறைக்க சமூகநீதி கூட்டமைப்பு என்ற பெயரில் நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு,தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும்,தமிழக மக்களின் நலனுக்காகவும் முடிந்தால் ஏதாவது செய்யும்படி வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்