பொங்கல் தொகுப்பு பொருட்களை குப்பையில் வீசி சென்ற பொதுமக்கள்: அதிர்ச்சி வீடியோ

வியாழன், 20 ஜனவரி 2022 (08:57 IST)
பொங்கல் தொகுப்பு பொருட்களை குப்பையில் வீசி சென்ற பொதுமக்கள்: அதிர்ச்சி வீடியோ
தமிழக அரசு பொங்கல் சிறப்பு தொகுப்பாக 21 பொருள்களை வழங்கியது என்பதும் இந்த பொருட்களில் பெரும்பாலானவை தரம் குறைவாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பல இடங்களில் ரேஷன் கடை அதிகாரிகளிடம் பொதுமக்கள் தரமற்ற பொருட்களை கொடுத்தது ஏன் என கேள்வி கேட்டு வருவது குறித்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன 
 
இந்த நிலையில் பொங்கல் தொகுப்பு பொருட்களை பொதுமக்கள் குப்பையை தூக்கி எறிந்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
இதனை அடுத்து பொங்கல் தொகுத்து வழங்கியதில் முறைகேடுகள் மற்றும் சரியான திட்டமிடல் அதிகாரிகளிடம் இல்லை என்பது தெரிய வந்துள்ளதாகவும் இது குறித்து முதலமைச்சர் தவறு செய்தவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது
 
மிளகுக்கு பதில் பருத்திக் கொட்டையும் மஞ்சள் தூளில் கோலமாவு கலந்து வழங்கியதாக ஆத்திரமடைந்த ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்களை குப்பையில் தூக்கி எறிந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பொங்கல் தொகுப்பு வழங்கியதில் முறைகேடுகள், சரியான திட்டமிடல் அதிகாரிகளிடம் இல்லை என்பதே உண்மை.

முதலமைச்சர் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.#tngovernment #pongalgift pic.twitter.com/Wd9zu4Uif4

— Stephen (@stevereports) January 19, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்