பந்தல் போட கூட அனுமதி தராத திமுக அரசு - சீமான் காட்டம்!

திங்கள், 31 ஜனவரி 2022 (13:02 IST)
காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம் தொடர்பாக நடக்கும் போராட்டம் குறித்து சீமான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 
சென்னைக்கு அருகேயுள்ள காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள அதானி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதற்கான திட்டம் 2019 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது. இந்த திட்டத்தின் படி, துறைமுகத்தின் பரப்பளவு 6,200 ஏக்கருக்கு விரிவாக்கம் செய்யப்படும். 
 
இந்நிலையில் காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம் மற்றும் L&T நிர்வாகம் வேலைவாய்ப்பு வழங்காமையைக் கண்டித்து பழவேற்காட்டை சேர்ந்த அனைத்து கிராம மக்களும் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இதனிடையே இது குறித்து சீமான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம் மற்றும் L&T நிர்வாகம் வேலைவாய்ப்பு வழங்காமையைக் கண்டித்து பழவேற்காட்டை சேர்ந்த அனைத்து கிராம மக்களும் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
நீண்ட நாட்களாக இம்மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் தமிழ்நாடு அரசு இதனைக் கவனத்தில்கொள்ள வேண்டும். மக்கள் புரட்சி வெல்லட்டும்! மறியல் நடக்கும் இடத்தில் பந்தல், நாற்காலிகள் முதலியவற்றை அனுமதிக்காமல் காவல்துறை தடுத்து இருப்பதனால் பொதுமக்கள் கடும் வெயிலுக்கு மத்தியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சனநாயகத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையின் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்