திமுக எம்பி கனிமொழி விருப்ப மனு தாக்கல் : சூடு பிடிக்கும் அரசியல்

Webdunia
திங்கள், 4 மார்ச் 2019 (13:18 IST)
சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கலைஞர் மகள் என்கிற முறையில் கனிமொழிக்கு எம்.பி பதவி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில்  சில வருடங்களுக்கு  முன்பு கலைஞர் டிவிக்கு முறைகேடாய் பணப்பரிமாற்றம் சம்பந்தமாக கனிமொழி சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது.
 
ஆனாலும் தொடர்ந்து அவர் எம்பி பதவியை வகித்து வந்தார். இந்நிலையில் வரும் நாடாளுமன்றத்  தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
தேனாம்பேட்டையிலுள்ள திமுக கட்சி அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் வைத்து இன்று கனிமொழி விருப்பமனு தாக்கல் செய்தார்.
 
பாஜக சார்பில் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் தூத்துக்குடியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்